அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மாணவ சமூகம் கல்வியறிவுடன் புரட்சிகர சிந்தனையோடு தனது வாழ்க்கையில் பயணிக்க வேண்டும்!

கல்வி தினத்தை முன்னிட்டு  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் தமிழக மாநிலத் தலைவர் முஸ்தபா சமீர்  வாழ்த்து செய்தியில் கூறியதாவது:

நவம்பர் -11 கல்வி தினமான இன்று இந்தியா முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு கல்வி விழிப்புணர்வு   நிகழ்ச்சிகளை செய்வதென திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களாகிய நாம் கல்வியுடன் கூடிய புரட்சிகர சிந்தனையோடு தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய காலச்சூழலில் இருக்கிறோம்.

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு  மாணவர்களுக்கெதிரான அடக்குமுறைகள் தொடர்கதையாகியுள்ளது.

ரோஹித் வெமுலா தற்கொலையில் துவங்கி கன்னையா குமார் கைது, புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரிலே குலக்கல்வியை திணிக்கும் முயற்சி, ABVP குண்டர்களால் கடத்தப்பட்ட JNU மாணவன் நஜீப் அஹமது விவகாரம் என மாணவர்களுக்கெதிரான வன்முறைகளின் பட்டியல் நீள்கிறது.

இத்தகைய நிகழ்வுகளுக்கு எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத மத்திய அரசு  மாணவர்களுடைய விஷயத்தில் எந்த அளவிற்கு மெத்தனப்போக்கை காட்டுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

எனவே ஒற்றுமையால் கட்டியமைக்கப்பட்ட நம் தேசத்தின் பன்முகத்தன்மையை உடைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராட வேண்டிய கடமை மாணவர்களாகிய நமக்கு உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக்  கேட்பதற்கு
இந்திய குடிமகன்களாகிய நமக்கு முழு சுதந்திரம் உள்ளது.

மேலும் இந்த தெசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய இளம் தலைவர் பகத் சிங் மற்றும் மைசூர் வேங்கை தீரர் திப்பு சுல்தானைப் போன்று அநீதிக்கெதிராக போராடுவதில் முன்னொடியக திகழ வேண்டும் எனவும்  கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு