தேசிய புலனாய்வு முகாம் (NIA) 28.11.2016 அன்று நான்கு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளது.
வழக்கம் போல கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் நடந்த பட்டாசு வெடிப்பு (அவர்கள் பாஷையில் குண்டு வெடிப்புகள் ) பிரதமர் மற்றும் தலைவர்களை கொலை செய்ய முயற்சி என ஊடகங்கள் உளவுத்துறையின் செய்திகளை அப்படியே கொடுத்து வருகின்றன.
இதனிடையே 2012- ம் ஆண்டு மே மாதம் மதுரை வந்திருந்த அத்வானியை கொலை செய்ய முயற்சி என்ற வழக்கிலும் மேலும் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை?
அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாத பட்டம் சுமத்தி முஸ்லிம் விரோத சிந்தனையை துரிதப்படுத்திட வேண்டி மத்திய அரசால் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களை வேட்டையாட பிரத்யேக பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் வேட்டைப் பிராணிதான் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை.
பா.ஜ.க தலைவர்கள் தும்மினால் கூட கூப்பிடுங்கள் என் ஐ ஏ வை என்பதிலிருந்தே என்.ஐ.ஏ எப்படிப்பட்ட அமைப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் அவ்வப்போது பட்டாசுகள் போன்று குண்டுகள் வெடிப்பதும் அதற்கு பின்னால் உளவுத்துறை இருக்கின்றது என்பது குறித்தும் காவல் துறையை சேர்ந்தவர்களே சொன்ன தகவல்கள் ஊடகங்களில் வந்திருந்ததை அனைவரும் அறிவர்.
அக்டோபர் 13, 2016 அன்று மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி காவல் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து தீப்பிடித்து எரிந்ததை காவல்துறை அப்படியே மூடி மறைத்துவிட்டதையும் அனைவரும் அறிவர்.
இதனிடையே , கடந்த வாரங்களில் மதுரையில் உள்ள, உளவுத் துறை போலிசார் சிலர் முஸ்லிம் பகுதிகளில் சம்பந்தமில்லாமல் இரவு நேரங்களில் சுற்றி வந்ததையும் முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளாமல் இல்லை.
இவை அனைத்தையும் பின்புலத்தில் இருந்து இயக்குவது யார் என்று சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் தான் இப்போது என்.ஐ.ஏ மதுரையில் களம் இறங்கியுள்ளது .
> > என்.ஐ.ஏ.வின் கைது குறித்து கருத்து தெரிவித்த சில ஊடகவியலாளர்கள் இப்படி தகவல்களை பதிவு செய்கின்றனர்.
> > என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் எந்த அதிரடி கைதுகளும் நடைபெறவில்லை(இவர்கள் தமிழகத்தில் ஐ-எஸ் என்ற பெயரில் நடத்திய வேட்டைகளும் போதிய கவனத்தை பெறவில்லை) என்பதால், அங்கு இருந்து என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று மேலிடம் இவர்களை கடுப்பேற்றி வந்துள்ளது. இதன் காரணமாக ஒருவர் மன உளைச்சலால் வேறு துறைக்கு ஓடி விட்டாராம்.
இந்நிலையில் நடந்துள்ள கைதுகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ( Demonetisation) என்ற அறிவிப்பினால் நடந்து வரும் அமளிகள், போராட்டங்கள், வேலை நிறுத்தம்,மக்களவையில் தொடரும் குழப்பம் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து முரட்டு மவுனம் சாதித்து வரும் பிரதமர், வரும் 1ம் தேதியன்று தமிழக அரசு ஊழியர்கள் உட்பட யாருக்கும் சம்பளம் பணமாக வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு அதனால் ஏற்படப் போகும் குழப்பங்கள் போன்றவற்றையும் நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.
கடந்த வாங்களில் நெல்லையிலும் உளவுத்துறை போலிசார் அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சிலரை ரகசியமாக பிடித்து கடத்த முயற்சித்தும், வாகன சோதனையின் போது மொபைல் எண், விலாசம் போன்ற பல தகவல்களையும் வாங்கியுள்ளனர்.
நெல்லை காவல் துறையின் செயல்பாடுகளை பார்த்த சிலர் நெல்லையில் ஏதாவது கைதுகள் நடக்கலாம் என்று டீக்கடைகளில் நின்று பேசிக் கொண்டனராம்.
அவர்களுக்கு தோதுவான நபர்கள் கிடைக்கவில்லை என்றதும் அவர்களின் ஆபரேஷன் மதுரைக்கு மாறிவிட்டதோ என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றார்களாம். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கேரளாவில் எழுந்த பலத்த எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் என்று ஒரு பெண் உட்பட இரண்டு பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கேரள ஊடகங்களும் கடந்த இரண்டு தினங்களாக தங்களின் கவனத்தை அதன் பக்கம் குவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் திடீரென வந்த தீவிரவாதிகள் (பஞ்சாப் துணை முதல்வர் அவர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றுள்ளார் ) சிறைச்சாலையை தகர்த்து 6 பேரை மீட்டு சென்றுள்ளனர் என்ற செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து தமிழகத்திலும் ஏதாவது நடை பெறலாம். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்களும் தேசதுரோகிகளாக மாற்றப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
நன்றி
முஹம்மது இஸ்மாயில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மாநில தலைவர்
தமிழ் நாடு
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்