திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி மகன் சல்மான் பார்சி (19), இவர் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் (ஆ.யு.ஆ) 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட சல்மான் பார்சி மாநில மற்றும் இந்தியஅளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் வருகிற 27, 28-ம் தேதிகளில் பூடான் நாட்டில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோர்க்கான சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் விளையாட சல்மான் பார்சி தேர்வு செய்யப்பட்டார். அதற்காக நேற்று முத்துப்பேட்டையிலிருந்து பூடான் நாட்டுக்கு சல்மான் பார்சி புறப்பட்டு சென்றார். மாணவனுக்கு முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சல்மான் பார்சின் தந்தை தமீம் அன்சாரி கூறுகையில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொலைக்காட்சி மூலம் தான் பார்த்து இருக்கிறேன். இன்றைக்கு அந்தவிளையாட்டு போட்டியில் எனது மகன் விளையாட செல்லயிருப்பது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.
தமிழகம்
முத்துப்பேட்டை மாணவர் பூடான் சென்றார் ...
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மத...
-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவ...
-
வடிவேலு ஓரு படத்தில் ஓரே நாளில் கோடீஸ்வரன் ஆவதற்ககு ஐடியா தரேன் என சொல்லி போஸ்ட்டர்கள் அடித்து ஐடியா கேட்க்க வருபவர்கள் தலைக்கு ஓரு ரூபாய் வ...


வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு