அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பொதுத்தேர்வு என்னும் ராட்சஷன்

எங்க வீட்ல எந்த பொழுதுபோக்கு சாதனங்களும் இல்ல,ஒரு வருஷத்துக்கு  எந்த குடும்ப விழாவுக்கும்,ஊர் திருவிழாவுக்கும் நாங்க வர மாட்டோம்,எங்க வீட்டுக்கும் யாரும் ஒரு வருஷத்துக்கு வந்துராதீங்க,எங்கயும் எங்கள கூப்பிடாதீங்க ..........

இப்படி எல்லாம் யாராவது சொன்னால் அது ஏதோ துக்கம் நடந்த வீடோனு நினைச்சு பயந்துராதீங்க.இப்படி எல்லாம்  சொன்னால் அவங்க வீட்ல 10th 12th படிக்கிற பிள்ளைங்க இருக்காங்கனு  அர்த்தம்...


வாழ்றதுக்காக படிச்ச காலம்  மலைஏறி   படிக்கிறதுக்காக வாழற காலம் வந்துவிட்டது ...கல்வி சமூகதிற்ககானது என்பது போய்  கல்வி மதிப்பெண்களுக்கானதா மாறி போய்விட்டது ....


எனக்கு எப்பொழுதும் நம் முந்தைய தலைமுறையின் மீது சிறு பொறாமை உண்டு .காரணம் அவங்களாம் ஆலமர விழுதை பிடிச்சு தொங்கி விளையாடி இருப்பாங்க....பல்லி மிட்டாய்  சாப்டுட்டு black forest cake சாப்பிட்ட மாறி சந்தோஷபட்டு இருப்பாங்க.......ஊர் கூடி பொங்கல்  வைக்கும் போது யார் வீட்டு பானை   முதல்ல  பொங்குதுனு  போட்டி வச்சு விளையாடி இருப்பாங்க.... பல்லாங்குழி,பாண்டி ஆட்டம் லாம் ஆடி ஜெய்ச்சிட்டா உலகத்தையே ஜெய்ச்சிட்ட மாறி சந்தோஷப்பட்டு இருப்பாங்க ......பாட்டி கதை சொன்னா தான் தூங்குவேனு அடம் பிடிச்சு இருப்பாங்க... 



முக்கியமா 10th 12th தேர்வு முடிவுகள் வர நாள் லாம் அவங்களுக்கு பெரிய விஷயமாவே இருந்து இருக்காது....



இந்த மாறி சின்ன சின்ன சந்தோஷங்கள் எல்லாத்தையும் இன்றைய கல்விமுறை திரை இட்டு மறைச்சு  வச்சு இருக்கு....என்னதான் நீங்க அப்படி எல்லாம் இல்லை என்று வாதாடினாலும் அதுதான் இன்றைய நிலைமை.....


பள்ளியில் பிள்ளையை சேர்க்க போகும்போது எந்த பள்ளி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்கிறது ,எந்த பள்ளி மாணவர்களின் திறைமைகளை வளர்க்க உதவி செய்கிறது,எந்த பள்ளி குழந்தைகளை குழந்தையாக பாவித்து நடக்கிறது.......என்று பார்க்காமல் நாம் அனைவரும் தேடுவது எந்த பள்ளியில் state rank holders படிச்சாங்க ,எந்த பள்ளி extra coaching class வச்சி மாணவர்களை பிழிஞ்சு எடுக்குறாங்க.........இப்படி தான்  நம் பிள்ளைக்கான பள்ளியை தேர்வு செய்கிறோம்.


10,12 வகுப்புகள் என்பது இப்பொழுது எல்லாம்  ஏதோ  வனவாசம் போவது போல் பிள்ளைகளை உணர வைக்கிறது. அவர்களுக்கு எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதி இல்லை .பிடிக்காத உணவாய் இருந்தாலும்    நியாபக  சக்திக்காக என்று சொன்னால் சாப்பிட்டே ஆக வேண்டும்.விடுமுறை நாட்களில் கூட tution சென்றே ஆக வேண்டும்.விடியற்காலை 4 மணிக்கே விழித்து கொள்ள வேண்டும்.


வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் நிலை இது என்றால் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் பிள்ளைகளின் நிலை இன்னும் மோசம்.10, 12  பொதுத்தேர்வு என்ன அவ்வளவு பெரிய ராட்சஷனா ???????பிள்ளைகளை அதை சொல்லியே மிரட்டுகிறுறீர்கள்.....எனக்கு சத்தியமாய் புரியவில்லை.அப்படி மிரட்டி மிரட்டி இவர்களை படிக்க வைத்து என்ன செய்ய போகிறீர்கள் ?????.அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து தான் என்ன செய்ய போகிறீர்கள்.??????



அதிகபட்சமாய் அவர்களை ஏதாவது பொறியியல் கல்லூரியிலோ அல்லது மருத்துவ கல்லூரியிலோ சேர்க்க போகிறீர்கள்.அவ்வளவு தானே !!!!இப்பொழுது தெருவுக்கு நாலு clinic உம் வீட்டுக்கு நாலு engineer களும் இருப்பது  போதாதா ?????இதில் பத்தோட பதினொன்னா உங்க பிள்ளையும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்களோ???


ஏற்கனவே பதின் வயதில் உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அந்த கால கட்டத்தில் ஏன் இன்னொரு சுமை ஆய் படிப்பை உம் அவர்கள் மீது சுமத்த  வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

10th,12th தான் ரொம்ப முக்கியமான கால கட்டம்னு  சொல்லி சொல்லியே அதில் fail ஆயிட்டா ஏதோ வாழ்க்கையே போய்விட்டது போல அவர்களை உணர வைப்பதால் தான் தேர்வு முடிவுகள் வெளி வரும் நாள் பல பேரின் இறுதி நாளாய் மாறி போகிறது.

மதிப்பெண்கள் மட்டும் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்க போவது இல்லை.நாம பெரிதாய் நினைக்கும் state rank holders லாம் என்னவாய் ஆனார்கள் என்று யாருக்கும் தெரிவது இல்லை.முடிவுகள் வெளி வரும் நாள் அன்று எல்லா ஊடகங்களும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும்.நீங்க எப்டி படிச்சீங்க ?உங்களுக்கு யார்லாம் உதவி செஞ்சாங்க?நீங்க என்னவா ஆக போறீங்க?என்று trade mark கேள்விகளை கேட்டு குடைந்து எடுக்கும்.அந்த பிள்ளைகளும் ஒரு நாள் கூத்து பற்றி அறியாமல் அனைவருக்கும் நன்றி சொல்லி ,தன் பள்ளிக்கு இலவசமாய் விளம்பர உதவி செய்து,அவர்கள் பெற்றோர் கண் கலங்கி,நான் doctor ஆக போறேன்,engineer  ஆக போறேன் ,மக்களுக்கு சேவை செய்ய போறேன் என்று சொல்லி சிரிக்கும்.


நான் அவர்களை குறை சொல்லவில்லை.வெற்றி கொண்டாடப்பட்ட வேண்டியது தான்.ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கான அளவுகோல் தான் முக்கியம்.வெற்றி பெற்றவர்களை தூக்கி கொண்டாடுவதால் தான் தோல்வி அடைந்தவர்கள் ஏதோ வாழ்க்கையே போய்விட்டது போல் உணர வைக்கிறது .தவறான முடிவுகளுக்கு அவர்களை திசை திருப்புகிறது.

நாம் இப்படி மதிப்பெண்களை மட்டுமே வெற்றியாய் கருதுவதால் தான் பல கல்வி நிறுவனங்கள் பள்ளிகளை சிறைச்சாலைகளை போல நடத்துகிறது.

மதிப்பெண்கள் என்பது நாம் அடுத்த கட்டத்திற்குள் நுழைவதுற்க்கான ஒரு துருப்பு சீட்டு மட்டும் தான்.அதை எப்பொழுது பெற்றோர்கள் உணருகிறார்களோ அன்றைக்கு தான் இந்த பொதுத்தேர்வு ராட்சஷன் அழிவான்.கூடவே பணம் சம்பாதிக்கும் நோக்கதுடன் பள்ளி ஆரம்பித்து மதிப்பெண்களை காரணம் காட்டி பெற்றோரை தன் பக்கம்  இழுக்கும் கல்வி நிறுவனங்களும் அழியும்.


























1 கருத்து

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு