அதிகம் படிக்கப்பட்ட பதிவு

அரசு (அவ‌ல‌) பள்ளிகள் !!!

அரசு  பள்ளிகள்

            படித்து  பட்டம் வாங்க அரசு கல்லூரி வேண்டும்,பணிபுரிய அரசு பணி வேண்டும்,கை நிறைய அரசு சம்பளம் வேண்டும்,அரசாங்கம் தரும் இலவசங்கள் வேண்டும்,அரசின் அணைத்து சலுகைகளும் வேண்டும்,ஆனால் பள்ளி மட்டும் அரசு பள்ளி வேண்டாம் .

             அதெல்லாம் இல்லை நீ சொல்வது எல்லாம் அபத்தமானது என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் நீங்கள்  தமிழகத்தில் இல்லை என்று அர்த்தம்.

                அப்படி என்ன வேறுபாடு அரசு பள்ளிக்கும் தனியார் பள்ளிகளுக்கும் என்று கேட்டால் வேறுபாடு பள்ளியில் இல்லை பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உள்ளது.


                அப்படி என்ன இருக்கிறது என்றால் நீங்கள் அரசு பள்ளி மாணவனாய் இருந்து இருந்தால் நிச்சயம் தெரிந்து இருக்கும்.நாம் அன்றாடம் கடந்து போகும்  அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சிந்தித்து பார்ப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

       
                உதாரணமாய் அரசு நடத்தும் ஏதோ  ஒரு போட்டியில் அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று விட்டால் , தனியார் பள்ளி  மாணவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இது  government நடத்துற competetion,அதுங்கலாம் government school ல இருந்து வந்து இருக்குங்க அதான் prize கொடுத்துட்டாங்க என்று காது பட பேசி போவது உண்மை.

                 
                  ஒரு பரிசை பற்றி  பேசியதுக்காகவா இவ்ளோ பெரிய பத்தி எழுதுன  என்று  நீங்கள் நினைத்தால் நிச்சயம்  உங்களுக்கு எங்களின் பிரச்சனை புரியவில்லை என்று அர்த்தம்.

                  இங்கு பிரச்சனை   போட்டியும்  இல்லை பரிசும் இல்லை .

                 
                திறமைகள்  பல   இருந்தும்,திறமை இன்  மூலம்  வெற்றி  கிடைத்தும் அந்த வெற்றி தனக்கான அங்கீகாரம் ஆய் பார்க்கபடமால்  தன்  பள்ளி இன் மேல் உள்ள பரிதாபத்தால் கிடைத்த வெற்றி ஆய் பார்க்கப்படும் போது ஏற்படும் வருத்தத்தையும் வலியையும் உணர்ந்து பார்த்தவர்களால் தான் அறிய முடியும்.ஏன் அரசு பள்ளி இல் படித்தால் திறமைசாளிகளாய்  இருக்க கூடாதா?

                 இந்த நிலை ஏற்பட காரணம் என்ன?அப்துல் கலாம் இல் தொடங்கி மயில்சாமி அண்ணாதுரை வரை அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் தானே?இன்றைக்கு பெரிதாய் மதிக்கப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களும்,கல்லூரி பேராசிரியர்களும் கூட அரசு பள்ளி மாணவர்கள் தானே?அவர்களை ஏற்று கொண்ட இந்த சமூகம் ஏன் இன்றைய தலைமுறை அரசு பள்ளி மாணவர்களை மட்டும் நிராகரிக்கிறது?

                        அரசு பள்ளிகள் பாட புத்தகங்களை மட்டும் அறிமுகபடுத்துவது இல்லை.வாழ்க்கை பாடங்களையும் சேர்த்தே புகட்டுகிறது .வாழ்வை அழகாய் வாழ வழி சொல்லி கொடுக்கிறது.நட்பின் ஆழம் அறிய வைக்கிறது.ஆசிரியர்களின் உள்ளே மறைந்து இருக்கும் பெற்றோரை படம் பிடித்து காட்டுகிறது.இவை எல்லாம் மற்ற பள்ளிகளில் கிடைக்குமா என்று  எனக்கு தெரியவில்லை.
                     

                              இப்பேர் பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று பார்க்க கூட  ஆள்   இல்லை .அணைத்து அரசு பள்ளிகளையும் ,அணைத்து அரசு அதிகாரிகளையும் குறை சொல்லவில்லை .இன்றும் ac bar வசதியுடன் இயங்கும் மதுபான கடைகள் இருக்கும் இதே இடத்தில கழிப்பறை வசதி கூட சரியாய் இல்லாமல் எத்தனையோ அரசு பள்ளிகள் இயங்குகின்றன.


                               இன்றும் பலபேர் அரசு பள்ளிகளில் english கொண்டு வந்து விட்டால் தரம் உயர்ந்து விடும் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார்கள்.எங்களின்  பிரச்சனை மொழி இல்லை என்பதை அவர்கள் அறிய போவது என்றைக்கு?


                                    இவை  எல்லாம் என்றைக்கு மக்கள் கவனம் பெறுகிறதோ  அன்றைக்கு தான் அரசு பள்ளியும் அரசு பள்ளி மாணவர்களும் மதிக்கபடுவார்கள்.
                             

                               அரசு பள்ளியில் படிப்பது தவறா???? கேட்க பல கேள்விகள் உண்டு எங்களிடம் பதில் சொல்ல தான் யாரும் இல்லை .
                       
                                                                                             




2 கருத்துகள்

  1. இன்றும் ac bar வசதியுடன் இயங்கும் மதுபான கடைகள் இருக்கும் இதே இடத்தில கழிப்பறை வசதி கூட சரியாய் இல்லாமல் எத்தனையோ அரசு பள்ளிகள் இயங்குகின்றன.////

    அருமை ... அருனையின் மாணவி என்பதில் எனக்கும் பெருமையே..

    பதிலளிநீக்கு
  2. அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் உள்ள வசதிகளை வித்தியாசம் சொல்லியே பொதுவாக இத்தகைய கட்டுரைகள் அமையும், ஆனால் அரசு பள்ளி என்பதற்காகவே திறமைக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று அவலத்தின் அடுத்த பக்கத்தையும் கட்டுரை அலசியிருப்பது அருமை.

    சில சில எழுத்துபிழைகள் , பதிவதற்கு முன் திருத்திகொள்ளவும்.

    தொடர்ந்து எழுதுங்கள்... சாமானிய மக்களின் பக்கம் என்றும் நம் பேனா இருக்கட்டும்..

    வாழ்த்துக்கள்.

    பொடியன்(அப்துல் ரஹ்மான்)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு