நகராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், பதிவானஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம், 147 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, 1,013 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்ஸீஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது.
யவெட்மால் மாவட்டம், உமர்கென் பகுதியில் AIMIM கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றைப் படைத்தது. மேலும் அப்பகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சி 7 இடங்களிலும், சிவசேனா 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் மற்றும் NCP கட்சி 1 இடங்களில் வெற்றி பெற்றது.
மேலும், ஷஹாதா என்கிற பகுதியில் 4 இடங்களிலும், பீத் (Beed) பகுதியில் 10 இடங்களிலும், புல்டானா (Buldana) பகுதியில் 2 இடங்களிலும் மற்றும் மல்கப்பூர் (Malkapur) பகுதியில் 6 இடங்களிலும் வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.
மேலும், ஷஹாதா பகுதியின் மாநகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் AIMIM கட்சி முக்கியத்துவமாக விளங்குகிறது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்