மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி சராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்கள் அரவிந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த கொடுரத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில் சுமார் 800 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின் போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும்போது “தமிழக மீனவர்களைக் கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்றும் அறிவித்ததும் அதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது இந்திய தரப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் வலுவாக தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கவில்லை என்று பேச்சு வார்த்தைகளில் பங்குக் கொண்ட தமிழக மற்றும் புதுவை மாநில மீனவர்களின் பிரதிநிதிகள் விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் மெத்தனப் போக்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை அழைத்து துப்பாக்கி சூட்டிற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம்
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மத...
-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவ...
-
வடிவேலு ஓரு படத்தில் ஓரே நாளில் கோடீஸ்வரன் ஆவதற்ககு ஐடியா தரேன் என சொல்லி போஸ்ட்டர்கள் அடித்து ஐடியா கேட்க்க வருபவர்கள் தலைக்கு ஓரு ரூபாய் வ...
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்