அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தஞ்சாவூரில் நிறைவு பிரச்சாரத்தில் மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர்!

இன்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி அவர்களை ஆதரித்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவீர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் துனைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துனைசெயலாளர் வழுத்தூர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர்பாஷா ஆகியோர்களுடன் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தொகுதி முழுக்க இருக்கக்கூடிய ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் தலைமை காஜி ஆகியோர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அவர்களோடு திரளான மஜக தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர்.

மாலை நான்கு மணியளவில் தஞ்சை இரயிலடியில் நடைபெற்ற நிறைவு பிரச்சார கூட்டத்தில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள்
மக்கள் வெள்ளத்தில்
எழுச்சியுரையாற்றினார். இதில் ஒன்பது அமைச்சர்களும், அதிமுக முன்னணி நிர்வாகிகளும், கூட்டணிக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

மஜகவின் சிறப்பான பணிகளுக்கு அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பாராட்டுகளை கூறி நன்றி தெரிவித்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு