மனிதநேய ஜனநாயக கட்சி
பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டிணம் நம்பியார் நகரை சேர்ந்த அரவிந்தன், காரைக்காலை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இரு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதால் படுகாயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை மனிதநேய ஜனநாயக கட்சி வண்மையாக கண்டிக்கின்றது.
சமீபத்தில் டில்லியில் கூட்டிய இந்திய மற்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள், அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறி இருக்கிறது.
இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இதை ஐக்கிய நாட்டு சபைக்கு கொண்டுசென்று இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மத்திய அரசு தலா 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுத்தொகையை இலங்கையிடமிருந்து பெற்று கொடுக்கவேண்டும். இல்லையேல் மத்திய அரசே இத்தொகையை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்