அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சென்னையில் பயங்கர தீ விபத்து - மீட்பு பணியில் தீயணைப்பு துறை மற்றும் எஸ்டிபிஐ, தமுமுக மற்றும் ததஜவினர்!

சென்னை மண்ணடி அருகில் இருக்கும் செகண்ட் லேன் பீச் பகுதியில் அமைந்துள்ள தாஸ் இந்தியா டவர் என்னும் கட்டிடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.அந்த பகுதியானது ஏடிஎம் கள் நிறைந்த பகுதி என்பதால் பெருவாரியான மக்கள் அங்கு  பணம் எடுப்பதற்காக அந்த பகுதி முழுவதும் திரண்டிருந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திலும்  அனைத்து தளங்களிலும் பெருவாரியான மக்கள் திரண்டிருந்தனர்.

இன்னிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு  விரைந்து வந்த எஸ்டிபிஐ கட்சியினர், தமுமுகவினர் மற்றும் ததஜவினர் ஆகியோர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் ஒரு சில தன்னார்வலர்களும் இவர்களுடன் இணைய காவல்துறையின்  அரிவிப்பு மைக் மூலம் அனைத்து தளங்களிருந்தவர்களுக்கும் தகவல்  அறிவிக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக அந்த பகுதியில் இருந்து மீட்க்கப் பட்டனர்.இவர்களின் சாமர்த்தியமான செயல் பாட்டல் எந்த ஒரு உயிர் சேதமும் ஏர்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த செயலை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு