இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 1992 டிசம்பர் 6,அன்று பல நூற்றாண்டுகால பாபரி மஸ்ஜிதை ஆர்.எஸ்.எஸ்,பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல்,சட்டத்துக்கு புறம்பாக இடித்து தரைமட்டமாக்கியது. ஆனால் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது முஸ்லீம்களின் பிரச்சனை அல்ல. மாறாக இது நமது தேசத்தின் பிரச்சனை. இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், மதச்சகிப்பு தன்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்,பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட சங்பரிவார கும்பல்களால் விடுக்கப்பட்டுள்ள சவால் என்பதை நாம் உணர வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்,நாட்டின் நலன் மீது அக்கரை கொண்டவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முன்வரவேண்டும்.
எனவே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும்.சட்டத்துக்கு புறம்பாக பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 6 ம் தேதி இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும்,பல்வேறு அறவழிப் போராட்டங்களும் நடைபெற உள்ளது.
அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பல்வேறு அறப்போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற போராட்டங்களில் பொதுமக்கள்,வியாபாரிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்: பி.எஸ்.ஐ.கனி
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்