தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் குவைத் மண்டலம் சார்பாக டிசம்பர் 6 கருப்புநாள் விளக்க கூட்டம் நேற்று 09-12-2016 மாலை குவைத் சிட்டி அலி டவரில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமுமுக மமக குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
தமுமுக-மமக தலைமை ஆலோசகர் ஹஜ்ரத் S.K. சம்சுதீன், தொழிலதிபர் Dr. டிவிஎஸ் ஹைதர் அலி, வெல்டன் குழும நிறுவனர் ஹனீப், தமுமுக குவைத் மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லகான், மமக குவைத் மண்டல செயலாளர் பந்தல்குடி சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா அவர்கள் டிசம்பர் 6 கறுப்புநாள் விளக்க கூட்ட எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் குவைத் மண்டல தமுமுக-மமக கிளை கழக நிர்வாகிகள் உருப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என 500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு தங்களது உணர்வையும் ஆதரவையும் வெளிபடுத்தினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்