அதிகம் படிக்கப்பட்ட பதிவு

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் - முகம்மது மைதீன் உலவி

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கே.எம். முகம்மது மைதீன் உலவி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது,

1988 லிருந்து கடந்த 28 வருடங்களாக, எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி "உலக எய்ட்ஸ் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.  .

1981-2012 ஆண்டுகளில் மட்டும் 36 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளார்கள் என்றும், 35.3 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிக்கைகள் கூறுகிறது.  

இப்படிபட்ட இக்கொடிய நோய் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்நாளில் மோசமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய மது, விபச்சாரம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக நமது பிரச்சாரம் அமைய வேண்டும். தீய பழக்கங்களை கைவிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

தீய பழக்கங்களை தவிர்ப்போம் !
நோயில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் ! என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு