அதிகம் படிக்கப்பட்ட பதிவு

EIFF அஜ்மான் – மண்டலம் நடத்திய பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

அஜ்மான் : எமிரேட்ஸ் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் அஜ்மான் மண்டலம் சார்பாக ‘என்றும் நம் நினைவில் – பாபரி மஸ்ஜித்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த டிசம்பர் 9  ம் தேதி நடைபெற்றது.

அஜ்மான் அல் மனாமா ஹைபர்மார்கெட் எதிர்புறம் உள்ள ஹாட் அன்ட் ஸ்பைசி ரெஸ்டாரன்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்திற்கு ஹாஜா ஹுசைன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் அமீரக பிரிவு செயலாளர் நிலாமுதீன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

இரவு 7 . 45 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஷார்ஜா அப்துர் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

பின்னர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, எமிரேட்ஸ் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் செய்து வரும் பணிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார்.

பின்னர் நஜிமுதீன் அவர்கள் பாபரி மஸ்ஜித் மீட்பதின் அவசியத்தை குறித்த பாடலை பாடினார்.

பின்னர் பொறியாளர் திருச்சி தமீம் மன்சூர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தனது சிறப்புரையில் சதி வலையில் பின்னப்பட்ட பாபரி மஸ்ஜித் வரலாறு குறித்து தெளிவுற எடுத்துரைத்த அவர், இளம் தலைமுறையினருக்கு பல்வேறு தளங்கள் வாயிலாக இவ்வரலாற்றை கொண்டு சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இடிப்பின் பின்னணி என்பது ஓர் அபாயகரமான கொள்கையோடு சம்பந்தப்பட்டது, அதுதான் ஃபாசிசம் என்று குறிப்பிட்ட அவர், ஃபாசிசத்தின் வேரும், வளர்ச்சியும் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார்.

அவரது சிறப்புரை பார்வையாளர்களுக்கு நல்ல தகவல்களைத் தந்து விழிப்புணர்வூட்டும்படியாக அமைந்திருந்தது.

சம்சுதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இறுதியாக பார்வையாளர்களுக்கு தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு