அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக திரு. பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அனைவருக்கும் ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும் ரகசிக் காப்புறுதியும் செய்து வைத்தார். தேர்தல் முடிந்த இந்த பத்து மாதங்களில் இவர் மூன்றாவது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் புதிதாக திரு.செங்கோட்டையன் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னால் முதல்வர் திரு. ஓ.பண்ணீர்செல்வம் அவர்களை ஆதரித்து திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சென்றமையால் காலியாக இருந்த பள்ளிக்கல்வித்துறை திரு.செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்ப்பட்டது. மேலும் திரு.பழனிசாமி அவர்கள் முதல்வர் பொறுப்புடன் சேர்த்து நிதித்துறைக்கும், உள்துறைக்கும் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி காரணமாக சேலம் செல்வதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்து புதிய அமைச்சரவை செயல்பட வேண்டும் என்றும் மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் பெங்களூரு சிறையிலிருந்து ஆலோசனை பெறாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு