சுடச்சுட

அதிகம் படிக்கப்பட்ட பதிவு

கட்டுரைகள்

தமிழில் தொழில்நுட்பம்

இந்தியா

சினிமா

விளையாட்டு

தமிழகம்

LATEST POSTS

சட்டமன்றத்தில் தமிழக அரசிற்கு எதிராக வாக்களிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு

item-thumbnail

சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. அறிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் நாளை (18.02.2017) அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவரவிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைபாடு குறித்து கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை, மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்காலத்தில் வலிமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் சட்டமன்ற வாக்கெடுப்பில் தமிழக அரசிற்கு எதிராக வாக்களிப்பதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு சட்டமன்ற கட்சித்தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் படிக்க »

பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழருவி மணியன்

item-thumbnail
தமிழகத்தைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்குப் பின்னால் அவர்களை இயக்கி வைக்கும் அழிவுச் சக்தியாக சசிகலாவின் குடும்பம்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதிமுகவின் உறுப்பினர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதால் பழனிசாமியை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனக்குரிய கடமையைச் சரிவர செய்துவிட்டார். இனி, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் சமூகக் கடமையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும்.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் அணி என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி பேதங்களைக் கடந்து பழனிசாமி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »

தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

item-thumbnail
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக திரு. பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அனைவருக்கும் ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும் ரகசிக் காப்புறுதியும் செய்து வைத்தார். தேர்தல் முடிந்த இந்த பத்து மாதங்களில் இவர் மூன்றாவது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் புதிதாக திரு.செங்கோட்டையன் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னால் முதல்வர் திரு. ஓ.பண்ணீர்செல்வம் அவர்களை ஆதரித்து திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சென்றமையால் காலியாக இருந்த பள்ளிக்கல்வித்துறை திரு.செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்ப்பட்டது. மேலும் திரு.பழனிசாமி அவர்கள் முதல்வர் பொறுப்புடன் சேர்த்து நிதித்துறைக்கும், உள்துறைக்கும் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி காரணமாக சேலம் செல்வதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்து புதிய அமைச்சரவை செயல்பட வேண்டும் என்றும் மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் பெங்களூரு சிறையிலிருந்து ஆலோசனை பெறாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க »

இலங்கையில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்

item-thumbnail

இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு 2016 இன்று கொழும்பு நகரில் இலங்கை மன்ற மண்டபத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு தொடக்கவிழாவில் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டின் முதல் நாளான இன்று
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா – 2016 மாநாட்டு மலர்களை மாநாட்டில் இலங்கை அமைச்சர்கள் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி முக்கிய விருந்தினர்களை சிறப்புசெய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் படிக்க »

இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்கள் எம.எஸ்.எப் லோகோவை வெளியீட்டார்

item-thumbnail

தேசம் முழுமையிலிருந்து மாணவர் சங்கமிக்கும் முஸ்லிம் மாணவர் பேரவையின் (msf) முதல் தேசிய மாநாடு கேரளா மாநிலம்,பாலக்காட்டில் நடைபெறுகிறது அதற்கான லோகோ (Logo) வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநில  தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் இன்று திருச்சியில் வெளியிட்டார்.

உடண் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் KMK ஹபிபுர்ரஹ்மான்,
எம.எஸ்.எப் மாநில செயலாளர் அன்சர் மற்றும் எம.எஸ்.எப் உறுப்பினர்கள்

மேலும் படிக்க »
பழைய இடுகைகள்
முகப்பு